அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலய அறக்கட்டளை சார்பில் திருமணவயல் உடையர்குடியிருப்பு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் எல்லாம் செய்யவல்ல ஓம் ஸ்ரீ மஹாகணபதிக்கு சதுர்த்தி விழா, சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது. அன்று மாலை சரியாக 6:00 மணிக்கு சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதைத் தொடர்ந்து மறுநாள் 26.08.2017 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு ஓம் ஸ்ரீ மஹாகணபதிக்குச் சிறப்பு ஆராதனையும் தொடர்ந்து சரியாக 09:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் பகல் 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானப் பெருவிழாவும் நடைபெற உள்ளது. அன்றையதினம் மஹாலெட்சுமி விரதமும் உள்ளது. இந்தச் சிறப்புத் திருவிளக்கு பூஜையை அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா கல்லூரி யதீஸ்வரி மீராபுரி மாதாஜி வெள்ளிமலை அவர்கள் நடத்தி வைக்க உள்ளார்கள். விளக்கு பூஜை முடந்ததும் மதியம் அன்னதானம் நடைபெறும். உலக மக்கள் நன்மைக்காக நடைபெற உள்ள இந்தத் திருவிளக்கு பூஜைக்கு அனைவரும் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்து ஓம் ஸ்ரீ மஹாகணபதியின் திருவருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.