விளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் பெண்மணிகள் கவனித்திற்கு
இந்த ஆண்டு திருவிளக்குப் பூஜையில் முதல் முறையாக கலந்துகொள்ளும் முதல் 120 பெண்மணிகளுக்கு மட்டும் பித்தளைத் திருவிளக்குகள் அறக்கட்டளை சார்பில் அன்பளிப்பாக வழங்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அன்பளிப்பாகத் திருவிளக்கு பெற்ற பெண்மணிகள் அந்தத் திருவிளக்கையே இந்த ஆண்டும் பூஜைக்கு கொண்டு வந்து வழிபட்டு அந்த விளக்கிற்கு உருவெற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது ஆகும்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்பவர்கள் பூஜைக்கு குறைந்தபட்சம் ஒன்பது நாட்கள் விரதம் அனுசரித்துப் பின் இந்தப் பூஜையில் கலந்துகொள்வது உத்தமம்.
இந்தச் சிறப்புத் திருவிளக்குப் பூஜையில்
கலந்துகொள்ள இந்தமுறை புதிதாகப் பூஜைக்கு வருபவர்களும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பூஜையில் கலந்து தயவு செய்து 11-08-2017 முதல் 21-08-2017 ஆம் தேதிக்குள் ஓம் ஸ்ரீ மஹாகணபதி ஆலயத்திற்கு வந்து முன்பதிவு செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்